கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடுநகர் பகுதியில் சுமார் இரண்டு ஏக்கர் அளவில் பூசணி செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த போதிலும் உரிய விலை கிடைக்கப் பெறாத காரணத்தினால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயி ஒருவர் கவலை தெரிவித்துள்ளார்.
தான் பூசணி செய்கை மேற்கொள்வதற்காக 25,000 ரூபாய்க்கு பூசணி விதையினை கொள்வது செய்வதாகவும் கிரிமிநாசினி மற்றும் உர வகைகள் தனியாரிடம் அதிக விலைக்கு பெற்றதாகவும் தற்பொழுது பூசணிக்காய் அறுவடை செய்து விற்பனை செய்ய முற்படும் வேளை வியாபாரிகள் ஒரு கிலோ பூசணிக்காயை 35 ரூபாய்க்கு கொள்வனவு செய்ய விரும்புகின்றனர்
ஆனால் சந்தையில் 1 கிலோ பூசணிக்காயின் விலை 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் தற்பொழுது மின்சார கட்டணம் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 2000 ரூபாய் மின் கட்டணம் செலுத்தியதாகவும் தற்பொழுது இம்மாதம் 8000 ரூபாய் மின் கட்டணம் செலுத்த நேரிட்டுள்ளதாகவும் இந்நிலை தொடருமாயின் தோட்ட செய்சைகை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் எனவும் தமது வாழ்வாதாரத்தை முற்றும் முழுதாக இலக்க நேரிடும் என கவலை தெரிவித்துள்ளனர்
எனவே இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உரிய அதிகாரிகள் எமது பூசணிக்காயை விற்பனை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்கள்.
தொடர்ச்சியாக களஞ்சியப் படுத்தி வைக்கப்பட்டு இருக்குமாயின் பூசணிக்காய்கள் பழுதடைய கூடும் எனவே விரைவாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கேட்டுக் கொண்டுள்ளார்