Welcome to Jettamil

திருச்சி கிழக்கை விட்டுக் கொடுத்தார் விஜய்! – எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தார் புதிய முதல்வர்!

Share

திருச்சி கிழக்கை விட்டுக் கொடுத்தார் விஜய்! – எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்தார் புதிய முதல்வர்!

இன்று காலை தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

இதற்கான அதிகாரப்பூர்வ இராஜினாமா கடிதத்தை அமைச்சர்களான செங்கோட்டையன் மற்றும் வெங்கட்ரமணன் ஆகியோர் சட்டப்பேரவைச் செயலாளரிடம் நேரில் வழங்கினர்.

கடந்த தேர்தலில் விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில், சட்ட விதிகளின்படி ஒரு தொகுதியை அவர் தற்போது விட்டுக் கொடுத்துள்ளார்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, ஒருவர் இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றால் 14 நாட்களுக்குள் ஒரு தொகுதியை இராஜினாமா செய்ய வேண்டும்.

அந்த வகையில், விஜய் திருச்சி கிழக்கை விட்டுக்கொடுத்துவிட்டு, மற்றொரு தொகுதியான பெரம்பூரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதன் மூலம் திருச்சி கிழக்கு தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது. முதல்வர் பதவியேற்ற கையோடு தனது கடமைகளை விரைந்து மேற்கொண்டு வருவது தவெக தொண்டர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை