தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடனேயே “அரசிடம் பணம் இல்லை” எனப் பேச வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
“மக்களுக்குத் திட்டங்களைக் கொண்டு சேர்க்கத் தேவையானது நிதியை விட மேலான மேலாண்மைத் திறனும் மனமும்தான்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் திமுக அரசு எத்தகைய சவால்களை எதிர்கொண்டது என்பதையும் அவர் தனது பதிவில் நினைவுபடுத்தியுள்ளார்.
கடந்த அரசு கடனை வைத்துவிட்டுச் சென்றதாக விஜய் முன்வைத்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஸ்டாலின், தமிழகத்தின் கடன் அளவு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள்ளேயே இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நிதிநிலை குறித்துத் தெரிந்தே வாக்குறுதிகளை அளித்துவிட்டு, இப்போது கஜானா காலி எனக் கூறி மக்களைத் திசைதிருப்பக் கூடாது” என அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், விஜய் இப்பதான் நிர்வாகத்திற்குள் நுழைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், எதிர்காலத்தில் அவரும் நிர்வாக நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வார் எனத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





