Welcome to Jettamil

திருமாவுடன் கைகோர்க்கும் விஜய்!

Share

திருமாவுடன் கைகோர்க்கும் விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்ற தவெக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு தற்போது 116 இடங்கள் வரை உறுதி செய்துள்ளது.

இருப்பினும், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களை அடைய இன்னும் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது.

இந்தச் சூழலில், விசிக தலைவர் திருமாவளவனைச் சந்தித்து ஆதரவு கோர விஜய் முடிவு செய்துள்ளார். இதற்காகச் சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்திற்குச் சற்று நேரத்தில் விஜய் நேரில் வரவுள்ளதால், அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“ஆட்சியில் அதிகாரம், அதிகாரத்தில் பங்கு” என்ற கொள்கையில் உறுதியாக இருக்கும் விசிக, விஜய்க்கு ஆதரவு அளிக்கப் பிரதிபலனாக அமைச்சரவையில் இடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“இது திருமா காலம்” என விசிக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வரும் நிலையில், விஜய்யுடனான இந்தச் சந்திப்பு தமிழக அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் எனக் கருதப்படுகிறது.

திருமாவளவன் பச்சைக்கொடி காட்டினால், விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை