Welcome to Jettamil

கொழுப்பு கல்லீரலை கட்டுப்படுத்த வேண்டுமா? தினமும் இதை குடித்தால் நன்மை கிடைக்கும்!

Share

கொழுப்பு கல்லீரலை கட்டுப்படுத்த வேண்டுமா? தினமும் இதை குடித்தால் நன்மை கிடைக்கும்!

கொழுப்பு கல்லீரல் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தினசரி சில ஆரோக்கியமான பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லீரல் உடலின் முக்கிய உறுப்புகளில் ஒன்றாகும். உடலில் தேங்கும் நச்சுப் பொருட்களை வெளியேற்றுவது முதல் செரிமான செயல்பாடுகள் வரை பல முக்கிய பணிகளை அது மேற்கொள்கிறது. தவறான உணவுப் பழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது.

கொழுப்பு கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் காலையில் தேநீர் அல்லது காபிக்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அருந்துவது நல்லது. ஒரு அல்லது இரண்டு குவளை வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவக்கூடும்.

அதேபோல் நெல்லிக்காய் சாறு, மஞ்சள் கலந்த நீர் அல்லது செலரி நீர் போன்ற பானங்களையும் காலை நேரத்தில் அருந்தலாம்.

உணவில் நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், கீரைகள், பீட்ரூட், கேரட் மற்றும் சாலட்களை அதிகம் சேர்த்துக்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும் வெளி உணவுகள், அதிக சர்க்கரை கொண்ட உணவுகள் மற்றும் டிரான்ஸ் கொழுப்பு அதிகமுள்ள பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அவசியம்.

தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் உடல் நீரேற்றத்துடன் இருப்பதோடு, கல்லீரலின் இயல்பான செயல்பாடுகளும் சீராக நடைபெற உதவும்.

அத்துடன் புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை கைவிடுவது கல்லீரல் பாதிப்புகளை குறைக்க உதவும்.

குறிப்பு: கொழுப்பு கல்லீரல் நோயை வெறும் பானங்கள் அல்லது வீட்டு வைத்தியங்களால் முழுமையாக குணப்படுத்த முடியாது. உடல் எடை கட்டுப்பாடு, சீரான உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனைகளே முக்கிய சிகிச்சை முறைகளாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை