Welcome to Jettamil

நீயா நானா யாமினிக்கு நேர்ந்த துயரம் ! – யாமினி உருக்கமான வேண்டுகோள்

Share

நீயா நானா யாமினிக்கு நேர்ந்த துயரம் ! – யாமினி உருக்கமான வேண்டுகோள்

கடந்த வாரம் ஒளிபரப்பான ‘காதல் தோல்வியில் தவிக்கும் இளைஞர்கள்’ என்ற தலைப்பிலான நீயா நானா நிகழ்ச்சியில், யாமினி தனது 4 வருட காதல் மற்றும் அதன்பின்பு ஏற்பட்ட மனமாற்றங்கள் குறித்து மிகவும் உருக்கமாகப் பேசியிருந்தார்.

“நான் ஒரு டாக்ஸிக்காக (Toxic) மாறிவிட்டேன்” என அவர் நேர்மையாக ஒப்புக்கொண்ட போது, தொகுப்பாளர் கோபிநாத் அவருக்குப் பக்குவமான அறிவுரைகளை வழங்கி அனுப்பியிருந்தார்.

இந்த எபிசோட் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது யாமினிக்கு எதிராகச் சில தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

யாமினியுடன் ஒரு இளைஞர் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “இவர்தான் காதலன்” எனச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பப்பட்டு வருகிறது.

இதற்குப் பதிலடி கொடுத்துள்ள யாமினி, “புகைப்படத்தில் இருப்பவர் எனது தம்பி போன்றவர்; அவர் ஒரு சின்னப் பையன். தயவுசெய்து அவதூறு பரப்பி அவருடைய வாழ்க்கையைக் கெடுக்காதீர்கள்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மன ஆறுதல் தேடி நிகழ்ச்சிக்கு வந்த தனக்கு, இத்தகைய விமர்சனங்களும் மன அழுத்தமும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை