வசமாக சிக்கிய யுவதிகள்!
பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல், ஒரே மோட்டார் சைக்கிளில் மூன்று யுவதிகள் ஆபத்தான முறையில் பயணிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து விசேட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், மோட்டார் சைக்கிள் மற்றும் அதில் பயணித்த மூவரையும் அடையாளம் கண்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யுவதியை புத்தல பொலிஸார் கைது செய்ததோடு, அந்த வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், குறித்த யுவதிகள் ஹிதிகிவுல, உனவடுன மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற யுவதியிடம் ஓட்டுநர் உரிமம் (Driving License) கூட இல்லை என்பது பொலிஸாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட யுவதி இன்று (மே 11) வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.




