Welcome to Jettamil

ஜனநாயகன்’ படத்திற்கு UA சான்றிதழ்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – பொங்கல் ரிலீஸ் உறுதியானது!

Share

ஜனநாயகன்’ படத்திற்கு UA சான்றிதழ்! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு – பொங்கல் ரிலீஸ் உறுதியானது!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்‘ திரைப்படத்திற்கு உடனடியாக ‘UA’ சான்றிதழ் வழங்குமாறு தணிக்கை குழுவிற்குச் சென்னை உயர்நீதிமன்றம் இன்று (09) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் படத்தின் வெளியீடு தொடர்பாக நிலவி வந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்துள்ளன.

படத்தில் இடம்பெற்றுள்ள சில சர்ச்சைக்குரிய காட்சிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் சின்னங்கள் பயன்படுத்தப்பட்ட விவகாரத்தால் சென்சார் சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுப்புத் தெரிவித்தது.

ரூ. 500 கோடி முதலீட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் திட்டமிட்டபடி இன்று (வெள்ளிக்கிழமை) வெளியாகாவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர மனுத் தாக்கல் செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, படத்திற்கு ‘UA’ சான்றிதழ் வழங்க உத்தரவிட்டதுடன், படத்தை மறு தணிக்கைக்கு (Re-censoring) அனுப்பிய தணிக்கை வாரியத்தின் உத்தரவை இரத்து செய்தார். படத்தில் பரிந்துரைக்கப்பட்ட சில மாற்றங்களைச் செய்தவுடன் சான்றிதழை வழங்குமாறு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இந்த அதிரடித் தீர்ப்பைத் தொடர்ந்து, விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் பொங்கல் விருந்தாகத் திரைக்கு வருவதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை