ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானம்! – சிதறிக் கிடக்கும் பாகங்களின் புகைப்படங்கள் வௌியீடு
ஈரானின் மத்திய பகுதியில் பறந்து கொண்டிருந்த அமெரிக்காவின் அதிநவீன F-35 போர் விமானம் ஒன்றை தங்களது வான் பாதுகாப்புப் படையினர் இன்று (03.04.2026) சுட்டு வீழ்த்தியதாக ஈரானியப் புரட்சிகரக் காவற்படை (IRGC) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விமானம் முற்றாகத் தகர்க்கப்பட்டதால், அதில் பயணித்த விமானியின் நிலை குறித்து இதுவரை எந்தத் தகவலும் இல்லை எனத் தெஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 28 அன்று தொடங்கிய மோதலுக்குப் பிறகு, F-35 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அறிவிக்கும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில், சிதறிக் கிடக்கும் விமானப் பாகங்களின் புகைப்படங்களை ஈரானிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
எனினும், இந்தப் புகைப்படங்களை ஆய்வு செய்த சில சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள், இவை F-35 விமானத்தின் பாகங்கள் அல்ல என்றும் தெரிவித்துள்ளனர்.




