Welcome to Jettamil

நடிகரிடம் நாட்டை கொடுக்க முடியாது – விஜயை கிண்டலடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் – பதிலடி கொடுத்த நடிகை அம்பிகா

Share

நடிகரிடம் நாட்டை கொடுக்க முடியாது – விஜயை கிண்டலடித்த நடிகர் பிரகாஷ்ராஜ் – பதிலடி கொடுத்த நடிகை அம்பிகா

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

எம்.ஜி.ஆருக்குப் பிறகு விஜய்யின் வருகைக்குத்தான் மக்கள் மத்தியில், குறிப்பாக பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

இந்த நிலையில், திமுக ஆதரவாளராகக் கருதப்படும் நடிகர் பிரகாஷ்ராஜ், விஜய்யின் அரசியல் நகர்வுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.

‘விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை, சினிமாவில் வேண்டுமானால் அவர் முதல்வராகலாம், நிஜத்தில் அது முடியாது; ஒரு நடிகரிடம் நாட்டை ஒப்படைக்க முடியாது’ என அவர் கருத்துத் தெரிவித்திருந்தார்.

பிரகாஷ்ராஜின் இந்த கருத்துக்கு மூத்த நடிகை அம்பிகா தற்போது பகிரங்கமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

‘அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கலைஞர் முதல் இன்றைய முதலமைச்சர், துணை முதலமைச்சர் வரை அனைவரும் சினிமா பின்னணி கொண்டவர்கள் இல்லையா?

ஒருவேளை ரஜினியோ, கமலோ முதல்வரானால் உங்களுக்கு சம்மதமா? விஜய்யின் வளர்ச்சியைப் பார்த்து உங்களுக்குப் பொறாமையா அல்லது வருத்தமா?’ என சரமாரியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த பதிலடி கேள்வி தற்போது வைரலாகி வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை