Welcome to Jettamil

அணுசக்தியை மிஞ்சிய ஹோர்முஸ் ஆயுதம்! உலகப் பொருளாதாரத்தை முடக்கும் ஈரானின் மாஸ்டர் பிளான்

Share

அணுசக்தியை மிஞ்சிய ஹோர்முஸ் ஆயுதம்! உலகப் பொருளாதாரத்தை முடக்கும் ஈரானின் மாஸ்டர் பிளான்

ஈரானின் அணுசக்தி மையங்களை மட்டுமே குறிவைத்து வந்த அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் தற்போது ஒரு புதிய உண்மை தெரியவந்துள்ளது.

ஈரானிடம் இருக்கும் உண்மையான அணு ஆயுதம் ஏவுகணைகள் அல்ல, அது ‘ஹோர்முஸ் நீரிணை’ எனும் கடல் வழிப்பாதைதான் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

உலகின் 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெறும் இந்தப் பாதையை ஈரான் முடக்கினால், உலகப் பொருளாதாரம் முற்றாகச் சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எவ்வித நேரடித் தாக்குதலும் இன்றி, உலகை மிரட்டும் இந்த உத்தி அமெரிக்காவின் மூலோபாயத்தையே மாற்றியமைத்துள்ளது.

ஈரானின் இந்தச் சவாலை முறியடிக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விசித்திரமான ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளார்.

அந்தப் பாதை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா ‘சுங்கக் கட்டணம்’ வசூலிக்கத் தகுதியுடையது என அவர் தெரிவித்துள்ளார்.

‘கடற்பயண சுதந்திரம்’ என்ற பெயரில் அமெரிக்கா அங்கு நிரந்தரமாக முகாமிடுவது ஈரானின் செல்வாக்கை உடைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், ஈரானின் சிறிய ரகப் படகுகள் மற்றும் ட்ரோன்களை நீண்ட காலத்திற்கு எதிர்கொள்வது அமெரிக்காவிற்குப் பெரும் இராணுவச் செலவையும், சர்வதேச அளவில் புதிய எரிசக்தி நெருக்கடிகளையும் உருவாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை