20,000 ரூபா பணத்தை எடுக்க வங்கிக்கு வந்த எலும்புக்கூடு – ஒடிசாவில் அதிகாரிகளின் பிடிவாதத்தால் நேர்ந்த திகில் சம்பவம்
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின நபர் ஜீத்து முண்டா. இவரது சகோதரி உயிரிழந்த நிலையில், அவரது வங்கி கணக்கில் இருந்த 20,000 ரூபாய் பணத்தை எடுக்க ஜீத்து பலமுறை வங்கிக்குச் சென்றுள்ளார்.
ஆனால், “பணம் வேண்டுமென்றால் உங்கள் சகோதரியை நேரில் அழைத்து வாருங்கள்” என வங்கி அதிகாரிகள் மனிதாபிமானமின்றி அவரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
தனது வறுமை நிலையையும், சகோதரி இறந்துவிட்டதையும் பலமுறை விளக்கியும் அதிகாரிகள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.
அதிகாரிகளின் தொடர் அலைக்கழிப்பால் விரக்தியின் உச்சிக்கே சென்ற ஜீத்து முண்டா, புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அதிலிருந்த எலும்புக்கூட்டை வங்கிக்குத் தூக்கி வந்து அதிகாரிகளிடம் காட்டியுள்ளார்.
இந்தச் சம்பவத்தைக் கண்டு வங்கியிலிருந்த ஊழியர்களும் பொதுமக்களும் உறைந்து போயினர்.





