நாளைய தினம் இந்திரவிழா காணும் வல்வையூர் நாயகி – வல்வெட்டித்துறை எங்கும் காட்சிதரும் மின்னலங்காரங்கள்
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் தீர்த்தத் திருவிழாவை முன்னிட்டு வல்வை மக்களால் முன்னெடுக்கப்படும் இந்திரவிழா நாளைய தினம் (01) வெகுவிமர்சையாக கொண்டாடப்படவுள்ளது.
இதனை முன்னிட்டு வல்வெட்டித்துறை எங்கும் மின்னலங்காரங்கள் மற்றும் நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வருடாவருடம் சித்திரா பௌர்ணமி தினத்தில் இவ்விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருவதுடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசிப்பதும் குறிப்பிடத்தக்கது.




