சிறுவர்களுக்கு சமூக வலைதளத் தடை! புதிய சட்டங்களைக் கொண்டுவரும் அரசாங்கம்!
மேற்பார்வையின்றி டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதால் சிறுவர்கள் சுரண்டப்படுதல் மற்றும் அதற்கு அடிமையாகும் அபாயம் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கவலை தெரிவித்துள்ளார்.
இதைக் கட்டுப்படுத்த, 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யவும், 5 வயதிற்குட்பட்டவர்கள் டிஜிட்டல் திரைகளைத் தவிர்ப்பதற்கும் புதிய பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து முறையான கொள்கைகளை வகுக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களின் நடத்தை ரீதியான சிக்கல்களைத் தடுக்கவும், அவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் மொபைல் சாதனங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அவசியம் என அரசாங்கம் கருதுகிறது.
விரைவில் இது தொடர்பான சட்டக் கோவைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





