Welcome to Jettamil

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்! தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவு!

Share

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்! தவெக ஆட்சி அமைக்க முழு ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களுக்கு இன்னும் 10 இடங்களே குறைவாக இருந்த நிலையில், காங்கிரஸ் தனது ஆதரவை உறுதி செய்துள்ளது.

சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்களும் இதற்கான ஆதரவுக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதன் மூலம் பல தசாப்தங்களாக நீடித்த திமுக – காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது.

“கூட்டணியில் மதவாத சக்திகளை அனுமதிக்கக் கூடாது” என்ற முக்கிய நிபந்தனையுடன் இந்த ஆதரவை காங்கிரஸ் வழங்கியுள்ளது.

இந்தத் கூட்டணி வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் இந்த முடிவுக்கு திமுக தரப்பில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், மே 7-ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதற்கான பாதையை இந்த ஆதரவு எளிதாக்கியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை