துரந்தர் 2 ஓடிடி ரிலீஸ் தேதி இதோ!
ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடிப்பில் கடந்த மார்ச் 19-ஆம் தேதி வெளியான ‘துரந்தர் 2: தி ரிவெஞ்ச்’, வசூலில் புதிய சரித்திரம் படைத்துள்ளது.
முதல் பாகம் 1300 கோடி ரூபாயை வசூலித்த நிலையில், இந்தப் இரண்டாம் பாகம் இதுவரை உலகம் முழுவதும் 1830 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தின் டிஜிட்டல் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, வரும் மே 14-ஆம் தேதி ‘துரந்தர் 2’ ஓடிடியில் வெளியாகிறது.
சர்வதேச அளவில் நெட்பிளிக்ஸ் (Netflix) தளத்திலும், இந்தியாவில் ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) தளத்திலும் இப்படம் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
குறிப்பாக, திரையரங்குகளில் இடம்பெறாத சில கூடுதல் காட்சிகள் மற்றும் தணிக்கை செய்யப்படாத ‘Raw & Undekha’ வெர்ஷனாக இது வெளியாகும் எனத் தெரிகிறது. சுமார் 3 மணிநேரம் 52 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த நீட்டிக்கப்பட்ட பதிப்பு ரசிகர்களுக்குப் புதிய அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.




