ஆட்சியே வேண்டாம்.. மக்களிடமே செல்வேன்! – விஜய்யின் அதிரடி முடிவால் திகைப்பில் தமிழகம்!
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரெனத் தனது முடிவை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
“ஆட்சியே வேண்டாம், யாருக்கும் அடிமையாக இருக்க நான் விரும்பவில்லை. பதவிக்காக எவர் காலிலும் விழத் தயாரில்லை” என விஜய் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
மக்களின் தீர்ப்புக்கு எதிராகப் பல சக்திகள் தமக்கு எதிராக அணி திரள்வதை எதிர்பார்க்கவில்லை என்றும், நிறைவேற்ற முடியாத நிபந்தனைகளை விதிப்பவர்களுடன் இணைந்து ஆட்சி நடத்த விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
“ஜாதி, மத, ஊழலுக்கு எதிரான அரசியலை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால், ஆட்சிக்கு முன்பே இவ்வளவு அழுத்தம் கொடுப்பவர்கள், ஆட்சிக்கு வந்த பின் என்ன செய்வார்கள் என்ற பயம் இருக்கிறது” என விஜய் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேநேரம், “ஒன்றே முக்கால் கோடி மக்களின் வாக்குகளை வீணாக்கக் கூடாது, நீங்கள் பின்வாங்கினால் எதிர்ப்பாளர்கள் அந்த இடத்தை நிரப்பி விடுவார்கள்” என நிர்வாகிகள் விஜய்யை சமாதானம் செய்து வருகின்றனர்.
விஜய்யின் இந்தத் திடீர் முடிவால் தமிழக அரசியலில் அடுத்த முதல்வர் யார் என்பதில் மீண்டும் பெரும் குழப்பம் நிலவுகிறது.





