முதல்வர் டைட்டில் கார்டில் திரைக்கு வரும் ‘ஜனநாயகன்’ திரையரங்குகளில் கொண்டாட்டத்திற்குத் தயாராகும் ரசிகர்கள்!
பொங்கல் ரிலீஸாக வரவேண்டிய ‘ஜனநாயகன்’ திரைப்படம், அரசியல் காரணங்களால் சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் முடங்கியது.
இதற்கிடையில், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் கசிந்தது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
“ஒவ்வொரு காட்சியும் ஒரு கனவு, தயவுசெய்து கசிந்த காட்சிகளைப் பகிராதீர்கள்” என இயக்குனர் ஹெச். வினோத் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார்.
தற்போது தேர்தல் முடிந்து விஜய் நிஜமாகவே முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், படத்திற்கு இருந்த தடைகள் அனைத்தும் விலகியுள்ளன.
விஜய்யின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, படம் இன்னும் இரண்டு வாரங்களில் வெளியாகும் என உறுதிப்படுத்தியுள்ளார்.
மேலும் ஒரு ஆங்கிலத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “விஜய் முதலமைச்சரான பிறகுதான் இந்தப் படம் ரிலீஸ் ஆக வேண்டும் என விதி இருந்திருக்கிறது; அதனால் படத்தின் டைட்டில் கார்டிலும் ‘முதலமைச்சர் விஜய்’ என்றுதான் வரும்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தச் செய்தி விஜய் ரசிகர்களை உச்சகட்ட குஷியில் ஆழ்த்தியுள்ளது.




