முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்: உணர்ச்சிப் பெருக்கில் தமிழர் தாயகம்!
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முதல் நாளான இன்று (11.05.2026), இலங்கை தமிழரசுக் கட்சியின் மானிப்பாய் கிளையின் ஏற்பாட்டில் வலி-தெற்கு பிரதேச சபை முன்பாக விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதில் தமிழரசுக்கட்சியின் செயலாளர் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் பொதுச்சுடரேற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார். உயிரிழந்த உறவுகளுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், ஈகச் சுடர்களும் ஏற்றப்பட்டன.
இறுதி யுத்தத்தின் போது, உணவின்றி தவித்த மக்கள் கஞ்சியையே பிரதான உணவாகக் கொண்டு உயிர் பிழைத்த அந்த வலியை நினைவுகூரும் வகையில், நிகழ்வில் கலந்துகொண்ட மக்களுக்கு ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ பரிமாறப்பட்டது.
இந்நிகழ்வில் வலி தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர், உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தமது அஞ்சலிகளைச் செலுத்தினர்.
இன்று முதல் வரும் மே 18-ஆம் தேதி வரை வடக்கு கிழக்கு எங்கும் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்படவுள்ளன.





