குதிரை பேரம் இல்லை.. இது குதிரை வேகம்! – சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் அதிரடி முழக்கம்!
தமிழக வெற்றிக் கழக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானம் இன்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், “தவெக அரசு ஒரு முழுமையான மதச்சார்பற்ற அரசாகவே செயல்படும்” என உறுதிபடத் தெரிவித்தார்.
மேலும், முந்தைய அரசுகளால் கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் தொய்வின்றித் தொடரும் என அறிவித்து, ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி என அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
தனது அரசு மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த முதல்வர், “தவெக அரசு குதிரை வேகத்தில் செயல்படும் அரசே தவிர, ஒருபோதும் குதிரை பேரத்தில் ஈடுபடும் அரசு இல்லை” எனத் தெரிவித்தார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய முக்கியக் கேள்வி ஒன்றுக்கு, “I will think about it” (நிச்சயம் அது குறித்துச் சிந்திப்பேன்) என ஆங்கிலத்தில் பதிலளித்துச் சபையை ஆச்சரியப்படுத்தினார்.
இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியின் மூலம் விஜய்யின் ஆட்சி அதிகாரம் சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.





