Welcome to Jettamil

பலாப்பழக் கொட்டையை இனி தூக்கி எறியாதீங்க! இதில் மறைந்திருக்கும் மருத்துவ நன்மைகளைத் தெரிஞ்சுகிட்டா கண்டிப்பா ஆச்சரியப்படுவீங்க!

Share

பொதுவாகப் பலாப்பழம் சாப்பிட்டதும் அதன் கொட்டைகளை நாம் குப்பையில் தூக்கி எறிவதுதான் வழக்கம். ஆனால், துத்தநாகம் (Zinc), வைட்டமின் ஏ, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் (Fiber) நிறைந்த இந்தப் பலாக்கொட்டை, உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?

பலாப்பழம் இனிப்பாக இருக்கிறது என்று அதிகம் சாப்பிட்டு வயிற்றுப் பொருமலால் அவதிப்படுபவர்கள், ஒரே ஒரு பலாக்கொட்டையை நன்றாக மென்று அதன் சாறை மட்டும் விழுங்கினால், உடனடி நிவாரணம் கிடைக்கும். மேலும், இதைச் சுட்டோ அல்லது அவித்தோ சாப்பிடும்போது வயிற்று வாயுத் தொல்லை முற்றிலுமாக நீங்கும்.

நார்ச்சத்து நிறைந்துள்ள பலாக்கொட்டைகள், மலச்சிக்கல் மற்றும் செரிமானக் கோளாறுகளைச் சரிசெய்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ (Vitamin A), கண்புரை மற்றும் பார்வைத் திறன் குறைபாடுகள் ஏற்படுவதைத் தடுத்துக் கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. மேலும், இதிலுள்ள புரதச்சத்து தசைகளை வலுவாக்க உதவுகிறது.

இதுமட்டுமல்லாமல், பலாக்கொட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இளமைத் தோற்றத்தைத் தந்து சுருக்கங்களை எதிர்த்துப் போராடுகின்றன.

பலாக்கொட்டையைக் குளிர்ந்த பாலுடன் சேர்த்து அரைத்துத் முகத்தில் அப்ளை செய்து வந்தால், பளபளப்பான பொலிவான சருமத்தைப் பெறலாம். இனி பலாக்கொட்டையை வீணாக்காமல் உணவில் சேர்த்துப் பயன்பெறுங்கள்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை