Friday, Jan 17, 2025

யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர்!

By kajee

யாழ்ப்பாணத்தில் 10 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த 60 வயது முதியவர்!

யாழ்ப்பாணம் – மருதங்கேணி பகுதியில் நேற்று முன்தினம் தனித்திருந்த 10 வயதுச் சிறுமி ஒருவர் 60 வயது முதியவரால் கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

சிறுமியின் பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் சிறுமி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இதன்போது அவரது வீட்டுக்கு பின் வீட்டில் வசிக்கும் 60 வயது முதியவர் ஒருவர் குறித்த சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தியுள்ளார்.

இதனை சிறுமி தனது பெற்றோருக்கு தெரியப்படுத்திய நிலையில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த முதியவர் தலை மறைவாகியுள்ளார். இந்நிலையில் மருதங்கேணி பொலிஸாரும், தடயவியல் பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு