நடிகர் விஜய் முதல்வராக வர வேண்டுமென கடா வெட்டி விருந்து
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் 2026 இல் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டி மதுரை மாவட்டம் விஜய் ரசிகர் மன்ற தலைவர்கள் கல்லணை தலைமையில் மதுரையின் காவல் தெய்வம் பாண்டி முனீஸ்வரர் கோவிலில் கடா வெட்டி வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.
இவ் விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாவட்ட வடக்கு தலமை கழக நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
முன்னர் தமிழக வெற்றிக்கழக தேர்தல் ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தில் 2026 இல் தேர்தலில் பணியாற்றுவது குறித்தே பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
கடா விருந்தினை ஒரு பிடி பிடித்த பொதுமக்களும் ரசிகர்களும் அரசியல் கட்சிகள் அடிக்கடி இது போன்று வயிறாற சாப்பாடு போட்டால் நல்லா இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.