Welcome to Jettamil

சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையல்ல என ஸ்ரேயா சரண் ஓபன் டாக் – வைரலாகும் பேட்டி!

Share

சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையல்ல என ஸ்ரேயா சரண் ஓபன் டாக் – வைரலாகும் பேட்டி!

‘எனக்கு 20 உனக்கு 18’ படத்தின் மூலம் அறிமுகமாகி, சூப்பர் ஸ்டாருடன் ‘சிவாஜி’, தளபதியுடன் ‘அழகிய தமிழ் மகன்’ எனப் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டவர் ஸ்ரேயா சரண்.

கடந்த ஆண்டு சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியது முதல், ‘மிராய்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தது வரை, இன்றும் தனது அபாரமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார்.

2018-இல் திருமணம் செய்து, ஒரு மகளுக்குத் தாயான பிறகும், தனக்குப் பிடித்தமான கதைகளைத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து நடித்து வருகிறார் ஸ்ரேயா.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய அவர், “திருமணம் ஆனவுடன் நடிகைகளின் திரை வாழ்க்கை முடிந்துவிடுகிறது என்ற மனப்போக்கு தவறானது” எனத் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் சாதிக்க வயது ஒரு தடையல்ல என்றும், கலைஞர்களுக்குத் திறமைதான் மிக முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

நல்ல கலைஞர்கள் எந்த வயதிலும் சாதிக்க முடியும் என ஸ்ரேயா பேசியுள்ள இந்தக் கருத்துக்கள், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பலருக்கும் உத்வேகத்தைத் தந்து வருகின்றது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை