Welcome to Jettamil

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கியை நீட்டிப் பெண்களை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி! காணித் தகராறில் பரபரப்பு

Share

யாழ்ப்பாணத்தில் துப்பாக்கியை நீட்டிப் பெண்களை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி! காணித் தகராறில் பரபரப்பு

யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் நேற்று (25.04.2026) இடம்பெற்ற காணித் தகராறு ஒன்றின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா துப்பாக்கியைக் காட்டிப் பெண்களை மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த காணித் தொடர்பான வழக்கு மல்லாகம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், நேற்று அதனைச் சுத்தம் செய்யும் பணியில் அர்ச்சுனா எம்.பி ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பெண்கள் இருவர், அது தமது காணி எனக் கூறி முரண்பட்ட போது, அர்ச்சுனா எம்.பி திடீரெனத் தனது கைத்துப்பாக்கியை எடுத்து அவர்களை மிரட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கையில் எவ்வித ஆயுதங்களும் இன்றி நின்ற பெண்கள் மீது, ஒரு மக்கள் பிரதிநிதியே துப்பாக்கியை நீட்டியது அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கிகள் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக் கூடாது எனச் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அர்ச்சுனா எம்.பி-யிடம் உள்ள துப்பாக்கியை அரசாங்கம் உடனடியாக மீளப் பெற வேண்டும் எனவும், இல்லையேல் பாரிய அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை