Welcome to Jettamil

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது! இளவாலை பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை – துப்பாக்கியும் பறிமுதல்!

Share

அர்ச்சுனா எம்.பி அதிரடி கைது! இளவாலை பொலிஸார் எடுத்த அதிரடி நடவடிக்கை – துப்பாக்கியும் பறிமுதல்!

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கடந்த 25-ஆம் திகதி இடம்பெற்ற காணித் தகராறின் போது, பெண் ஒருவரைத் துப்பாக்கி முனையில் கொலை செய்துவிடுவதாக அச்சுறுத்திய குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், இன்றைய தினம் (27) வாக்குமூலம் வழங்குவதற்காக இளவாலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்த நிலையில், பொலிஸாரால் அவர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட அர்ச்சுனா எம்.பி-யிடமிருந்து, அச்சுறுத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கியும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இளவாலை பொலிஸார் தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதி ஒருவரே துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்போவதாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளமை யாழ்ப்பாணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை