இது நம்ம சூப்பர் சிங்கர் பூஜாவா? பாடகியா அல்லது கதாநாயகியா என வியக்கும் ரசிகர்கள்!
சூப்பர் சிங்கர் சீசன் 9-இல் டாப் 5 இடங்களைப் பிடித்து, தனது தனித்துவமான குரலால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் பூஜா வெங்கட்.
இதனைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட பல படங்களில் பாடும் வாய்ப்பைப் பெற்றார்.
பின்னர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கி, தனது கலகலப்பான பேச்சால் சின்னத்திரை ரசிகர்களின் செல்லப் பிள்ளையாக மாறினார்.
தற்போது பல ஆல்பம் பாடல்களைப் பாடி வரும் அவர், சமூக வலைத்தளங்களில் கிளாமரான ரீல்ஸ்களையும் பதிவிட்டு வருகின்றார்.
இந்நிலையில், முன்னணி நடிகைகளுக்கே சவால் விடும் வகையில், ட்ரெண்டியான சிவப்பு நிற உடையில் பூஜா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இப்போது வைரலாகி வருகின்றன.
“இது நம்ம பூஜாவா?” என ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு செம மாடர்ன் மற்றும் ஹொட் போஸில் அவர் மிரட்டியுள்ளார்.




