Welcome to Jettamil

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

Share

இலங்கையில் சிறையிலுள்ள தமிழக கடற்றொழிலாளர்கள்: முதலமைச்சர் விஜய்யிடமிருந்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

இராமநாதபுரத்தைச் சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் செய்தி வெளியான சில மணிநேரங்களிலேயே, தமிழக முதலமைச்சர் விஜய் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏற்கனவே 54 தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் வாடும் நிலையில், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 6 பேரையும் சேர்த்து மொத்தம் 60 பேரையும் உடனடியாக மீட்க மத்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களின் வாழ்வாதாரமான 264 படகுகள் இலங்கை வசம் இருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர், அவற்றை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளார்.

சர்வதேச கடல் எல்லையைத் தாண்டியதாகக் கூறித் தொடரும் இந்த அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வராகப் பதவியேற்ற பிறகு வெளியுறவுத்துறை சார்ந்த ஒரு விவகாரத்தில் விஜய் எடுக்கும் முதல் முக்கிய நடவடிக்கை இதுவாகும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை