யாழில் குடும்பத் தகராறு விபரீதம்! நீதிமன்றம் சென்று திரும்பிய மனைவிக்கு நேர்ந்த கதி
சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த தம்பதியினரிடையே நீண்டகாலமாக நிலவி வரும் குடும்பப் பிணக்கு தொடர்பான வழக்கு, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், நேற்று இந்த வழக்கு விசாரணைக்காக மனைவியும் அவரது சகோதரரும் நீதிமன்றத்திற்குச் சென்றிருந்தனர்.
விசாரணைகள் முடிந்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, வழியில் மறைந்திருந்த கணவன் அவர்களை வழிமறித்து கத்தியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இந்தக் கொடூரத் தாக்குதலில் படுகாயமடைந்த பெண்ணும் அவரது சகோதரரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காகச் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பட்டப்பகலில் வீதியில் வைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாகச் சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





