பாளையத்து அம்மன்’ சத்யா பாப்பாவா இது? அடையாளமே தெரியாமல் வளர்ந்துவிட்ட நடிகை அக்ஷயா ஜெயராம்!
தமிழ் சினிமாவில் ‘அம்மன்’, ‘கோட்டை மாரியம்மன்’ எனப் பக்தித் திரைப்படங்கள் கொடிகட்டிப் பறந்த காலத்தில், 2000-ஆவது ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான படம் ‘பாளையத்து அம்மன்’.
மீனா அம்மனாக மிரட்டிய இப்படத்தில், ‘சத்யா’ என்ற முக்கியமான குழந்தை நட்சத்திரக் கதாபாத்திரத்தில் நடித்தவர் அக்ஷயா ஜெயராம்.
அழகி, தோஸ்த், ஆஞ்சநேயா எனப் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த இவரை, அந்த ‘சத்யா பாப்பா’ என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும்.
தற்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்ட அக்ஷயா ஜெயராமின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.
“பாளையத்து அம்மன் படத்தில் நடித்த அதே பாப்பாவா இது?” என ரசிகர்கள் வியப்புடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
திரையில் அம்மன் அருள்பெற்ற அந்தச் சிறுமி, இப்போது இவ்வளவு அழகாக வளர்ந்துவிட்டாரே என நெட்டிசன்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.




