காதலனை உயிருடன் எரித்துக் கொன்ற காதலி! “சர்ப்ரைஸ்” என நம்பவைத்து அரங்கேறிய கொ*டூரம்
பெங்களூருவைச் சேர்ந்த 27 வயதான பிரேமா, கடந்த இரண்டு ஆண்டுகளாக கிரண் என்பவரைக் காதலித்து வந்துள்ளார்.
சமீபகாலமாக கிரண் திருமணத்தில் ஆர்வம் காட்டாததால் ஆத்திரமடைந்த பிரேமா, அவரைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டுள்ளார்.
தனது வீட்டிற்கு கிரணை வரவழைத்து, “மேற்கத்திய பாணியில் சர்ப்ரைஸ் கொடுக்கப் போகிறேன்” எனக் கூறி அவரது கண்களைக் கட்டி, நாற்காலியுடன் சேர்த்து இறுக்கமாகக் கட்டியுள்ளார்.
காதலியின் பேச்சை உண்மை என நம்பி கிரணும் எவ்வித எதிர்ப்பும் காட்டாமல் ஒத்துழைத்துள்ளார்.
கிரணால் நகர முடியாத நிலை ஏற்பட்டவுடன், அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்துள்ளார் பிரேமா.
இதில் உடல் கருகி கிரண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இக்கொ*டூரச் செயலைப் பிரேமா தனது செல்போனில் வீடியோவும் எடுத்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணையில், “கிரண் என்னைத் தவிர்க்கத் தொடங்கினான், என்னை ஏமாற்றிவிடுவான் என்ற ஆத்திரத்தில் இப்படிக் செய்தேன்” எனப் பிரேமா வாக்குமூலம் அளித்துள்ளார். அந்த வீடியோ ஆதாரங்களுடன் பிரேமாவைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.




