Welcome to Jettamil

மாணவர்களுக்கு விசித்திர ஹேர் ஸ்டைல்! அதிரடியாக மூடப்பட்ட இரண்டு சிகை அலங்கார நிலையங்கள்

Share

மாணவர்களுக்கு விசித்திர ஹேர் ஸ்டைல்! அதிரடியாக மூடப்பட்ட இரண்டு சிகை அலங்கார நிலையங்கள்

மட்டக்களப்பு, மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குள் உள்ள சில சிகை அலங்கார நிலையங்களில், மாணவர்களுக்குப் பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு முரணான வகையில் விசித்திரமான முறைகளில் முடி வெட்டப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

நான்கு பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் பெற்றோர்கள் வழங்கிய எழுத்து மூல முறைப்பாட்டைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் மே. வினோராஜ் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் நேற்று முன்தினம் (24) அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்தச் சோதனையின் போது, அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மீறி மாணவர்களுக்கு முறையாக முடி வெட்டாத இரண்டு சிகை அலங்கார நிலையங்கள் உடனடியாக மூடி முத்திரையிடப்பட்டன.

“மாணவர்களின் ஒழுக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் விசித்திரமான வடிவங்களில் முடி வெட்டுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” எனத் தவிசாளர் வினோராஜ் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய சமூகச் சீர்கேடுகளுக்குத் துணை போகும் நிலையங்களின் வர்த்தக அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும் அவர் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை