ஜனாதிபதி ட்ரம்ப்பைக் குறிவைத்துத் துப்பாக்கிச் சூடு – மயிரிழையில் தப்பிய டொனால்ட் ட்ரம்ப்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள ‘வொஷிங்டன் ஹில்டன்’ ஹோட்டலில், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் வருடாந்த இரவு விருந்து நேற்று இரவு நடைபெற்றுக் கொண்டிருந்தது.
ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் மேடையில் இருந்தபோது, திடீரென துப்பாக்கிச் சூடு போன்ற பலத்த சத்தம் கேட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஜனாதிபதியும் விருந்தினர்களும் உடனடியாகத் தரையில் படுத்துப் பாதுகாப்பைத் தேடினர். உடனடியாகச் செயற்பட்ட ‘சீக்ரெட் சர்வீஸ்’ பாதுகாப்புப் பிரிவினர், ஜனாதிபதியையும் மெலனியா ட்ரம்பையும் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றினர்.
இச்சம்பவத்தில் ஜனாதிபதி, துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் காயமின்றித் தப்பியதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கலிபோர்னியாவைச் சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.
இது குறித்துத் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், சட்ட அமுலாக்கத் துறையினரின் மின்னல் வேக நடவடிக்கையைப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிகழ்வு, பின்னர் பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் மீண்டும் தொடங்கியுள்ளது.





