இத்தாலியே.. எங்களுக்கு அந்த இடத்தைத் தருவாயா? – இணையத்தைக் கலக்கும் ஈரானின் கிண்டல் கடிதம்!
போப் ஆண்டவரைப் பாதுகாத்துப் பேசியதற்காக இத்தாலியப் பிரதமர் மெலோனியை ஜனாதிபதி டிரம்ப் விமர்சித்துள்ள நிலையில், இத்தாலிக்கு ஈரான் ஒரு பகிரங்கக் கடிதத்தை எழுதியுள்ளது.
“வாஷிங்டனில் நீங்கள் இழந்த அந்த இடத்திற்கு நாங்கள் விண்ணப்பிக்கிறோம்” எனத் தொடங்கியுள்ள அந்தக் கடிதத்தில், “எங்களிடம் 7,000 ஆண்டுகால நாகரீகம் உள்ளது; டிரம்பின் கவனத்தை விட அதிக நேரம் எடுத்து சமைக்கப்படும் ருசியான உணவுகள் எங்களிடம் உண்டு” என டிரம்பை ஈரான் எள்ளி நகையாடியுள்ளது.
ஈரானுக்கும் இத்தாலிக்கும் இடையில் இதுவரை பெரிய மோதல்கள் வந்ததில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள அந்தக் கடிதம், “யார் ஐஸ்கிரீமைக் கண்டுபிடித்தது?” என்பது பற்றி மட்டும்தான் தங்களுக்குள் 2,000 ஆண்டுகளாகப் ‘பனிப்போர்’ நடப்பதாகக் கிண்டலடித்துள்ளது.
“பலூடா தான் முதலில் வந்தது, ஆனால் ஜெலட்டோ சத்தமாக வந்தது” என ஈரான் குறிப்பிட்டுள்ள விதம் சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
உலக அரசியலில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில், ஈரானின் இந்த இராஜதந்திர நையாண்டி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Dear Italy,
— Iran in Ghana (@IRAN_GHANA) April 15, 2026
Your PM just defended Pope and lost an ally in Washington — the Commander in Grief, yet the most 'powerfool'man on earth.
We'd like to apply for the vacancy.
Our qualifications: 7,000 years of civilization, a shared love of poetry, architecture, and food that…





