Welcome to Jettamil

பாகிஸ்தானுக்கு அந்த தகுதி கிடையாது! – ஈரானின் அறிவிப்பால் உலக அரசியலில் பரபரப்பு!

Share

பாகிஸ்தானுக்கு அந்த தகுதி கிடையாது! – ஈரானின் அறிவிப்பால் உலக அரசியலில் பரபரப்பு!

அமெரிக்காவுடனான மோதலைத் தீர்க்க பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த நிலையில், அதற்கு ஈரான் எம்பி இப்ராஹிம் ரெசாய் (Ibrahim Rezai) கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

“பாகிஸ்தான் ஒரு நல்ல நண்பராக இருக்கலாம், ஆனால் மத்தியஸ்தம் செய்ய அதற்குத் தகுதி இல்லை” என அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்காவின் நலன்களுடன் ஒத்துப்போகும் ஒரு நாடாக இருப்பதே இதற்கு முக்கியக் காரணம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

லெபனான் விவகாரம் மற்றும் முடக்கப்பட்ட சொத்துக்கள் தொடர்பாக அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத போது, அதனைச் சுட்டிக்காட்ட பாகிஸ்தான் தவறிவிட்டதாக ஈரான் எம்பி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு மத்தியஸ்தர் என்பவர் பாரபட்சமற்றவராக இருக்க வேண்டும்; ஆனால் பாகிஸ்தான் எப்போதும் அமெரிக்காவை வெளிப்படையாக விமர்சிப்பதைத் தவிர்க்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை