சர்க்கரை நோய் முதல் மூட்டு வலி வரை குணமாக்கும் ‘மாதுளை டீ’: பலரும் அறியாத மருத்துவ உண்மைகள்!
மாதுளம்பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் கொட்டிக் கிடக்கின்றன. விலை சற்று அதிகமாக இருந்தாலும், இரத்த சோகை (Anemia) உள்ளவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாகும்.
மாதுளம்பழத்தில் உள்ள அனைத்துச் சத்துக்களும் இந்த மாதுளை டீயிலும் நிறைந்துள்ளன. இதில் உள்ள ‘பாலிஃபீனால்கள்’ (Polyphenols) உடலில் ஆங்காங்கே ஏற்படும் வீக்கங்களைக் குறைப்பதோடு, நீண்ட நாட்களாக இருக்கும் கை, கால் வலி மற்றும் மூட்டு வலி போன்ற நாள்பட்ட பிரச்சினைகளையும் குணமாக்க உதவுகிறது.
பொதுவாக, உணவு சாப்பிட்டதும் செரிமானம் ஆக வேண்டும் என்பதற்காகப் பால் டீ குடிக்கும் பழக்கம் பலரிடம் உண்டு. ஆனால், அதற்குப் பதிலாக இந்த மாதுளை தேநீரைப் பருகும் போது செரிமானம் மிக வேகமாக மேம்படுவதாக மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.
சர்க்கரை நோயாளிகள் உணவு சாப்பிட்ட பிறகு இந்த மாதுளை டீயைப் பருகுவது மிகவும் நல்லது.
இது இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைக் தடுத்து, அதனைக் கட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது. அதுமட்டுமன்றி, மாதுளை டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுத்து, வயதாகும் தோற்றத்தைக் (Anti-aging) குறைப்பதுடன் சருமத்தை எப்போதும் பொலிவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவுகிறது.





