Welcome to Jettamil

அநுர அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்கிய சரத் பொன்சேகா…!

Share

அநுர அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்கிய சரத் பொன்சேகா…!

ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக அதிகபட்ச தண்டனையை நடைமுறைப்படுத்தி வரும் தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் மிகச் சிறந்ததாகத் தென்படுவதாகப் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் ஐந்து வருட காலத்திற்கு முழுமையான ஆணையை வழங்கியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அந்த மக்கள் ஆணையின் கீழ் ஊழல்வாதிகளுக்குத் தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்குத் தாங்கள் அரசாங்கத்திற்கு ஆசீர்வாதம் வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த அரசாங்கத்தைக் கவிழ்க்க ஏதேனும் ஒரு குழுவோ அல்லது அமைப்போ சதி முயற்சிகளில் ஈடுபட்டால், அதனைத் தான் ஒருபோதும் அங்கீகரிக்கவோ அல்லது அனுமதிக்கவோ போவதில்லை என்றும், இவர்களுக்கு இந்த ஐந்து வருட காலத்தை முழுமையாக முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க வேண்டும் எனவும் அவர் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை