Welcome to Jettamil

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீண்டும் மூடல்

Share

வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக மசகு எண்ணெய் கொள்வனவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளமையினால்,

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீண்டும் மூடப்படுகிறது என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்

மேலும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் நாளாந்தம் 6,500 மெற்றிக் டன் மசகு எண்ணெய் சுத்திகரிக்கப்படுகின்றது.

டொலர் பற்றாக்குறை காரணமாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி தற்காலிகமாக மூடப்பட்டு 22 நாட்களுக்குப் பின்னர் மீளத் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று முதல் மூடப்படும் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் இந்த மாத இறுதியில் மீளத் திறக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மாத இறுதியில் ஒரு தொகுதி மசகு எண்ணெய் நாட்டுக்குக் கிடைக்கப்பெறும் எனவும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டாலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை