இன்றைய நாணய மாற்று விகிதங்கள் வெளியீடு! டொலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதியில் மாற்றம்
இலங்கை மத்திய வங்கி இன்று (02.04.2026) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 76 சதமாகவும், அதன் விற்பனை விலை 319 ரூபாய் 29 சதமாகவும் பதிவாகியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மாற்றங்களுக்கு மத்தியில், டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் ஒரு நிலையான போக்கைக் காட்டியுள்ளது.
இதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 424 ரூபாய் 42 சதமாகவும், யூரோவின் விற்பனை விலை 370 ரூபாய் 25 சதமாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் 230 ரூபாய் 99 சதத்திற்கும், அவுஸ்திரேலிய டொலர் 222 ரூபாய் 08 சதத்திற்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
சிங்கப்பூர் டொலரின் இன்றைய விற்பனை விலை 249 ரூபாய் 96 சதமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





