புலிகளுக்கே அஞ்சாதவர் மகிந்த! – விசாரணை ஆணைக்குழுவின் அழைப்பிற்கு சஞ்சீவ எதிரிமான்ன பதிலடி!
ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மகிந்த ராஜபக்சவிற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சஞ்சீவ எதிரிமான்ன, “விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கே அஞ்சாத மகிந்த ராஜபக்ச, இந்தச் சாதாரண விசாரணை ஆணைக்குழுவிற்கு ஒருபோதும் அஞ்சப்போவதில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
மகிந்த மிகவும் நிதானமாகவும், துணிச்சலாகவும் இதனை எதிர்கொள்வார் என அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.
மேலும், தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தையும் சஞ்சீவ கடுமையாக விமர்சித்துள்ளார்.
“மின்சாரக் கட்டணத்தை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, இன்று மக்களை நடுத்தெருவில் விட்டுள்ளனர்” என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நிலக்கரி இறக்குமதியில் ஊழல் நடப்பதாகக் கூறிய அவர், இது போன்ற விசாரணைகள் மூலம் தங்களது அரசியல் பயணத்தைத் தடுத்துவிட முடியாது எனவும் எச்சரித்துள்ளார்.
Source : Tamilwin




